அலி ரொஷானுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று(13) தாக்கல்…

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று(13) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று(13) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த ஆட்சேபனையை ஏற்றுக் கொண்டு எதிர்வரும் பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு பிரதிவாதிகள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி இந்த ஆட்சேபனை தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி விளக்கமளிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.