ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு மைத்திரி – ரணில் – மஹிந்த கடும் கண்டனம்..

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று(14) CRPFவீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 44 பேர் பலியாகி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைமைகள் தங்களது அனுதாபத்தினை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் தளத்தில்; ஜம்மு காஷ்மீர் தாக்குதலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் உலகம் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அதற்காக உறுதிபூண்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையி; காஷ்மீர் தாக்குதலானது மிகவும் கொடூரமானது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நரேந்திர மோடிக்கும் ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்கிறேன், அந்நாட்டு வீரர்களை இழந்தமையானது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டரில்; குறித்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் தான் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் மனப்பூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். உலகம் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.


குறித்த தாக்குதலில் CRPF இராணுவ வீரர்கள் 44 பேர் பலியாகியுள்ளதோடு, பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

(iFA)