தனமல்வில துப்பாக்கி பிரயோகம் – மூவர் கைது…

தனமல்வில பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

03 துப்பாக்கிகள் இரு மோட்டார் சைக்கிள்களுடன் குறித்த சந்தேக நபர்கள் இன்று(16) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ்ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.