பாராளுமன்றம் இன்று(20) கூடுகிறது…

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று(20) பிற்பகல் 01 மணியளவில் கூடவுள்ளது.

பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் இரண்டு கோவைவிதிகள் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.