வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணிக்கும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிக வேகத்துடன் பயணிப்பதனால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்காகவே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அதிக வேகத்துடன் பயணிக்கும் பேரூந்துகள் தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறையிட முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.