கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக குறித்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்கத்தின் சிரெஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிற்கு 101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.