இஸ்ரேலுக்கு யாத்திரை சென்றிருந்த இலங்கையர்கள் 53 பேர் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(20) மாலை மற்றும் இன்று(21) அதிகாலை இவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இவர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குளியாப்பிட்டி, வென்னப்புவ மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு இஸ்ரேலில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.