விசேட சுற்றிவளைப்புக்களில் 3711 பேர் கைது…

(FastNews – Colombo) நேற்றிரவு(22) தொடக்கம் இன்று(23) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 938 பேர் உள்ளிட்ட மூன்றாயிரத்து 711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் செலுத்திய 768 சாரதிகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

மேலும், வீதி விதிமுறைகளை மீறிய ஐந்தாயிரத்து 818 சாரதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.