சீனாவில் தன்னாட்சி உரிமம் பெற்ற மங்கோலியா பகுதியில் உள்ள வெள்ளிச் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற பகுதிகளில் இருந்து அந்த சுரங்கத்துக்கு சுமார் 50 தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு பஸ் சுரங்கத்தின் அடிப்பகுதியில் செங்குத்தாக கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.