(FASTGOSSIP | COLOMBO) – தமிழர்கள் விடயத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவது, ஐ.நா. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் செயலென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று(25) முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் விகேன்ஷ்வரன் மற்றும் ஆனந்த சங்கரியும் கலந்து கொண்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“மனித உரிமைகள் சபை தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது, மனித உரிமைகள் சபை பாதிக்கப்பட்ட எமது மக்களை ஏமாற்றுவதாகவே அமையும்.
இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கையாள வேண்டும் என்று கோரியுள்ளோம்.
அது சாத்தியப்படாவிட்டால் சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவான பொருத்தமான ஒரு பொறிமுறையின் கீழ் மனித உரிமைகள் சபை இதனைக் கையாள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
![]()