இந்திய வான்படைக்கு சொந்தமான 02 விமானங்கள் நொறுங்கியது – மூவர் பலி…

(FASTNEWS | INDIA) – இந்திய வான்படைக்கு சொந்தமான விமானங்கள் இரண்டு இந்தியா – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வான்படையினால் சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.