(FASTNEWS-COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் இன்று(28) டுபாய் நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றன.