(FASTNEWS-COLOMBO) – வடக்கின் பாதுகாப்பிற்கு, வடக்கில் 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று(28) நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும். இது தொடர்பில் இன்று(01) வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை சந்தித்து அவரிடம் இவ்விடயம் தொடர்பில், வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கனேசநாதன் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.