(FASTNEWS| COLOMBO)- பொது பல சேனா அமைப்பினால், சட்டமா அதிபருக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டதாக பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளரான வித்தாரந்தனியே நந்த தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சில அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையை தாம் அவதானித்ததாகவும், இது போல உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிறையில் அடைக்கப்பட்ட நிலைமையே ஞானசார தேரருக்கும் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் நியாயமற்ற செயற்பாடாகும் எனத் தெரிவித்து சட்டமா அதிபருக்கு தாம் கடிதம் அனுப்பியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் மேலும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.