ரயில் போக்குவரத்து தண்டவாளங்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் சட்டம் தொடர்ந்தும் அமுலுக்கு…

(FASTNEWS| COLOMBO)- ரயில் போக்குவரத்து தண்டவாளங்களுக்கு அருகிலும் பாதுகாப்பற்ற முறையில் பயணஞ் செய்யும் பொதுமக்கள் தொடர்பில், தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப் போவதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி, அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற முறையில் ரயில் மார்க்கத்தில் பயணிப்பதன் காரணமாக, நாளொன்றுக்கு 2 – 3 பேர் வரையில் மரணிப்பதாகத் தெரிவித்துள்ள திணைக்களம், கடந்த இரு மாதங்களில் மாத்திரம் 64 பேர் மரணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.