(FASTNEWS-COLOMBO) உலக வாழ் இந்து மக்களால் இன்று(04) சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும்.
மகா சிவராத்திரியை மன்னிட்டு நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.
மகா சிவராத்திரிக்கான பிரதான பூஜைகள் நாயன்மார்களால் பாடல் பெற்ற திருத்தலங்களான திருக்கேதீஸ்சரம், நகுலேஸ்சரம், முனிஸ்வரம் கோனேஸ்வரம் உள்ளிட்ட ஆலயங்களில் இடம்பெறுகின்றன.