ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை

விரல் நகங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

பெண்கள் முகத்திற்கு காட்டும் அக்கறையை விரல் நகங்களுக்கும் காட்ட வேண்டும். பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். அதற்கான சில டிப்ஸ்…

* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.

* ஆலிவ் எண்ணெயை இலேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

* நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.

* உடலில் கல்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.

* நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.

* வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.

* வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.