(FASTNEWS| COLOMBO)- சேனா படைப் புழுவினால் சேதமடைந்த சோள செய்கைக்கு எதிர்வரும் 10 ம் திகதி முதல் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கைகள் மாகாண விவசாய பணிப்பாளர்களினால் அனுப்பப்பட்டுள்ளதாக விவசாய சபை பணிப்பாளர் பண்டுக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அழிவடைந்த சோள செய்கைக்கான மதிப்பீடுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகம் இதற்கென 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,
இன்று(04) மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைபெறுமெனவும் விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அழிவடைந்த சோள செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா இழப்பீடாக வழங்கப்படவுள்ளதாக விவசாய சபை பணிப்பாளர் பண்டுக வீரசிங்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.