(FASTNEWS | COLOMBO) – 2019 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது.
4.19PM – வரவு செலவு திட்ட வாசிப்பு நிறைவு. பாராளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4.18 PM – கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு.
4.15 PM – நாளையிலிருந்து அதிசொகுசு வாகன இறக்குமதி வரியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன். வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீத வைப்பு இரத்து செய்யப்படவுள்ளது.
04:12PM – சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு.
04:08 PM – யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு.
04:05 PM –புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை.
04:03 PM – வடக்கில் 10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு.
04:02 PM – இராணுவ வீரர்களின் சீருடைக்கான கொடுப்பனவை அதிகரித்தல்
04:00 PM – இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்.
03:58 PM – சமுர்த்தி அபிவிருத்திக்கு 1,000 பில்லியன்.
03:55 PM – கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
03:50 PM – பிளாஸ்ரிக், பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.
03:48 PM – இயற்கை அனர்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்ட ஈட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை.
03:45PM – சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.
03:44 PM – இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.
03:43 PM – குடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:41 PM- அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு.
03:40 PM – ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு.
03:38 PM – அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
03:37 PM – அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு.
03:36 PM – 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்திற்கு அமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 04 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
03:35 PM – ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க 75% கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
03:34 PM – கிராம வீதிகளை புனரமைப்பு செய்ய 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:32 PM – கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:30PM – போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை
03:28 PM – யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
03:27 PM – கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.
03:26 PM – அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.
03:25 PM – தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை.
03:24 PM – கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன்.
03:23 PM – சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு.
03:22 PM – விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை.
03:21 PM – பொருளாதார அபவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளடக்கம்.
03:20 PM – 3இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும் 35,000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனையோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர முடியாதவர்களுக்கு ‘ மை பியுச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் 1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .
03:20 PM – பாடசாலைகளின் அடிப்படை வசதிகளை அதிகரிக்க 32,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:19 PM – பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:18 PM – கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு.
03:18 PM – ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை.
03:17 PM – நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய வேண்டும் என்பது கட்டாயம்.
03:16 PM – இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு .
03:15 PM – கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
03:14 PM – தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
03:13 PM – அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
03:12 PM – 250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை.
03:11 PM –சகல உற்பத்திகளினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை
03:10 PM – கூட்டு முயற்சி உருவாக்கத்திற்கு முன்னுரிமை ( இது உள்நாட்டு கம்பனிகளின் வளர்ச்சிக்கு உதவும்)
03:09 PM – தேசிய பூங்காக்களுக்கான அனுமதிச்சீட்டு பணம் 15 சதவீத்ததால் குறைப்பு – (வெளிநாட்டு மாணவ சுற்றுலாப்பயணிகளுக்கு மாத்திரம்)
03:08 PM – நவீன தொழில்நுட்ப வசதிகள் – குறிப்பாக இணையவழி ஹோட்டல் முன்பதிவு உள்ளிட்டவற்றை விரிவாக்கல் – அதனூடாக சுற்றுலாத்துறையை விரிவாக்கல்.
03:08 PM – இயந்திரங்களுக்கான வரி 2.5 வீதம் குறைப்பு.
03:07 PM – தேசிய ஏற்றுமதிக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
03:06 PM – போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நோக்கத்திற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
03:05 PM – புதிய கைத்தொழில் வலையங்கள் உருவாக்கப்படும்.
03:05 PM – பொருத்தமான உட்கட்டமைப்புக்களில் முதலீடு செய்வதில் மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படல்.
03:04 PM – என்டர்பிரைஸ் புத்தாக்கத் திட்டம் – 3 வருடத்திற்குள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
03:04 PM – நிர்மாணம், சுற்றுலா, உற்பத்தி துறைகளில் விசேட கவனம்.
03:03 PM – வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கத்தகுந்த ஆலோசனைகள்.
03:03 PM –வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
03:03 PM – “HOME SWEET HOME” என்ற திட்டத்திற்கு 6 வீத வட்டி – 25 வருடங்களில் கடனை செலுத்த வேண்டும் – 10 மில்லியனுக்கும் அதிக கடன் வழங்கப்படும்.
03 : 02 PM – வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற வளங்களை பயன்படுத்த திட்டம்
03:01 PM – 3 மாதங்களுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
03:00 PM – வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
02:59 PM – விசேட தேவையுடையவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அது 5000 ரூபாவாக அதிகரிக்கப்படும். அதற்காக 4,320 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
02:58 PM – சிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு 1,480 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
02:57 PM – புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு விசேட கடன் வசதி.
02:56 PM – வடக்கு, கிழக்கில் 15, 000 வீடுகள் நிர்மாணிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேலும் அதிகரிப்பு.
02:55 PM – சிறைச்சாலையில் உள்ள பெண்கள் சிறிய குற்றமிழைத்தோர், இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கும் நோக்கில் நிதி ஒதுக்கீடு.
02:53 PM – போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு வீரவில பிரதேசத்தில் நல்வழிப்படுத்தும் வகையில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
02:51 PM – சிறைச்சாலைகளில் உள்ள பெரும்பாலானோர் போதைப்பொருளுடன் தொடர்புடையோர் ; அதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை.
02:50 PM – விசேட தேவையுடையோரில் குறைந்தது 5 பேரை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தினால் விசேட வரிச்சலுகை.
02:49 PM – தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் மகப்பேற்று காலத்தில் 3 மாத கால விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
02:48 PM – பாடசாலையின் பின்னரான விடுமுறை தினங்களில் சிறுவர்களை பராமரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
02:47 PM – பொது பேரூந்து நிலையம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கழிவறை நிர்மாணம் ; அதனை தனியார் துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளோம்.
02:46 PM – இவ்வருடம் நாட்டில் கழிவறை இல்லாத நிலையை உருவாக்குவதற்கு 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
02:45 PM – இலங்கை நடுநிலை வருமானம் பெறும் நாடு ; ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு முறையான கழிவறை வசதி கூட இல்லாமல் இருக்கின்றனர் ; மொனராகலை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேருக்கு முறையான கழிவறை வசதி கூட இல்லை.
02:43 PM – அரச பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் போசனைமட்ட அதிகரிப்பிற்கு ஒரு குவளை பால் வழங்கல்.
02:42 PM – அதிவேக வீதி அபிவிருத்திக்கு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ; அதிவேக வீதி மற்றும் போக்குவரத்து தொடர்பாக வாசிக்கப்பட்டமைக்கு எதிர் தரப்பு கூச்சல்.
02:41 PM – மண்டைதீவு – பேசாலையில் மீன்பிடி துறைமுகஙை்களை உருவாக்க நிதி ஒதுக்கீடு.
02:40 PM – 21 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு இந்த வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டால் நன்மை.
02:39 PM – தோட்டத்தொழிலாளர் சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் பேச்சுவார்த்தை ; அதற்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கும் ஆலோசனை.
02:38 PM – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானதொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை.
02:37 PM – மொரகஹா கந்த திட்டத்திற்கு 12000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு
02:36 PM – இலங்கை கறுவா ஏற்றுமதியின் போது தகுதிச்சான்றிதழ் பெறல் கட்டாயம். இலங்கை கறுவாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை உறுதி செய்ய விசேட நிதி ஒதுக்கீடு
02:35 PM – தென்னை பொருளுற்பத்தியாளர் அனுமதிப்பத்திரம் வழங்கலில் மீள்பரிசீலனைகளை ஏற்படுத்தல்
02:34 PM – டயர் உற்பத்தியாளர்களுக்கு 500 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பரிசோதனை வசதிகளை விரிவாக்கல்
02:33 PM – மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.
02:31 PM – கோழிப்பண்ணை வியாபாரிகளுக்கு திரிசவிய கடன் திட்டத்தை விரிவாக்கல்
02:30 PM – தேசிய இளைஞர் சேவைகள் சபையின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக் கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
02:29 PM – இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை.
02:28 PM- விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும்.
02:25 PM- சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.
02:21 PM – என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை
02:19 PM – கடந்தாண்டு அரசியல் சூழ்ச்சியால் முதலில் நிறுத்தப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டத்தினைமீளவும் எமது அரசு ஆரம்பித்தது.
02:05 PM – 73 ஆவது வரவு செலவுத் திட்டம், இலங்கையில் 24 ஆவது நிதி அமைச்சரான, மங்கல சமரவீரவால் சமர்பிக்கப்படுவதற்கு முன்பதாக சபையில் அமைச்சர் உரையாற்றுகிறார்.
02:04 PM – பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பம்.