(FASTNEWS-COLOMBO) இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று(06) காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டிலுள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையினை வலுப்படுத்த, அரசியல் பகைமையை மறந்து நாட்டிற்காக பணியாற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.