அனைவரது கவனத்தினையும் ஈர்ந்த 500 கோடி வைரம் இதுதான்… (PHOTOS)

(FASTGOSSIP | COLOMBO) – பன்னிப்பிட்டி – எருவ்வல பிரதேசத்தின் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற வைரக்கல் பெஹலியகொட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கடந்த 04ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபரான ‘கெவுமா’ நேற்று(05) அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, துப்பாக்கி ரவைகள் 647, கைப்பேசிகள் 126 மற்றும் கைவிலங்கு 03 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் திட்டத்துக்கு அமையவே இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.