பிலிப்பைன்சில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

(FASTNEWS- PHILIPPINES) பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று(06) 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தவாவ் நகரில் இருந்து வடகிழக்கில் 211 கிமீ தொலைவில், கடலுக்கடியில் 60 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் சில வினாடிகள் குலுக்கியுள்ளதாகவும் . அருகில் உள்ள பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.