இன்று(08) முதல் புகையிரதங்களில் பெண்களுக்கு முன்னுரிமை…

(FASTNEWS-COLOMBO) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று முதல் 7 அலுவலக புகையிரதங்களில் பெண்களுக்கான பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் வான் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, , காலையில், மீறிகம, ரம்புக்கணை, பொல்காவலை மற்றும் மஹவ ஆகிய புகையிரத நிலையங்களில் இருந்து புறப்படும் அலுவலக புகையிரதங்களில் பெண்களுக்காக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் மற்றும் காலி ஆகிய புகையிரத நிலையங்களில் இருந்து காலை வேளைகளில் மருதானையை நோக்கி பயணிக்கும் புகையிரதங்களிலும் பெண்களுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் சகல புகையிரத சேவைகளிலும் இணைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் முகங்கொடுக்கும் சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.