(FASTNEWS-COLOMBO) மட்டக்குளி மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை கேரள கஞ்சாவுடன், மட்டக்குளியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நிட்டம்புவ திஹாரிய பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவர் போதை பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.