(FASTNEWS | COLOMBO) – வறட்சியான காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 40.7%வரை குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனால், மின் உற்பத்தி நிலையங்களினூடாக 20% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டினை பரிசோதனை செய்வதற்காக மார்ச் 01ம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை நீர் வெளியேற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வறட்சியுடனான வானிலை நிலவும் போதே நீர்த்தேக்கங்களில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.