
இரத்திணக் கற்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை…
(FASTNEWS | COLOMBO) – இரத்திணக் கற்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இரத்திணக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற தீட்டப்படாத இரத்திணக்கற்களை இலங்கையில் மேம்படுத்துவதன் ஊடாக பாரியளவான வருமானம் ஈட்ட முடிவதாகவும் குறித்த சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே குறித்த புதிய வேலைத் திட்டம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.