(FASTNEWS | COLOMBO) – மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக இராணுவம் உள்ளக விசாரணைகளை நடத்தாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவத் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், 15 பக்கங்களைக் கொண்ட குறித்த அறிக்கையானது கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது.
அதில், போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா. அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர், அனைத்தலுக மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார்கள் என, ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.