(FASTNEWS|ANDAMAN) அந்தமான் தீவுகளில் இன்று(11) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.