பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும்..

(FASTNEWS |USA)- பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் சபை கூட்டத்தில், பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர்கள், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.