கொழும்பில் இலகு ரயில் திட்டம்…

கொழும்பில் இலகு ரயில் திட்டம்…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு இலகு ரயில் திட்டத்திற்காக 48 பில்லியன் ரூபாவை நிவாரணக் கடனாக வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும் ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவனமும் கைச்சாத்திட்டன.

மாலபே நகரையும் கொழும்பு கோட்டையையும் இணைக்கும் வகையில் இலகு ரயில் வலைப்பின்னல் ஸ்தாபிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் நிலவும் சன நெரிசலைக் குறைத்து பயணிகள் இலகுவாக முக்கிய இடங்களுக்கு பயணிக்க வழிவகுப்பது திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.