அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை…

(FASTNEWS|COLOMBO) அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதுடன், கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

குறித்த நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர் எனவும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.