ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

(FASTNEWS|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்று பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருப்பதால் வேறு ஒரு தினம் வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அதன்படி வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருத்தல் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது