கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனுவினை விசாரிக்க தினம் குறிப்பு..

(FASTNEWS |COLOMBO)- விசேட மேல் நீதிமன்றினால் கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணத்தின் போது அரசாங்க நிதி 33.9 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவினை நீக்குமாறு கோரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனுவினை மார்ச் மாதம் 26ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(12) தினம் குறித்துள்ளது.