(FASTNEWS|COLOMBO) மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான புகையிரத சேவை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் பெலியத்த வரை பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரத மார்க்கத்தில், கெகணதுர, பம்பரென்த, வெவுருகன்னல, பெலியத்த ஆகிய புகையிரத நிலையங்களும் பிலதுவ மற்றும் வெஹெரஹேன ஆகிய உப புகையிரத நிலையங்களும் உள்ளடங்குகின்றன.
மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ள புகையிரத பாதைத் திட்டமானது 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும்புகையிரத பாதை அமைக்கப்படவுள்ளதாக தெரஈக்கப்படுகின்றன.