(FASTNEWS|COLOMBO) அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும் அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று(12) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியினால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது
அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர்கள் கையடக்க தொலைபேசிகளில் அழைப்பு மேற்கொண்டதுடன், அழைப்புகளுக்கு பதில் வழங்கியமையினால் ஜனாதிபதியினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.