(FASTNEWS |COLOMBO)- அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி வரலாற்றில் முதல் தடவையாக தொழிற்சங்கங்கள் 30 இணைந்து இன்று(13) முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பாடசாலைகளது கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றன.