அமெரிக்கா வைத்தியசாலைக்கு 2019 ஆண்டுக்கான பிரபல இரு விருதுகளை வென்று கொடுத்த இலங்கை வைத்தியர் இவர்தான்.. (PHOTOS)

(FASTNEWS | USA -Rock Hill) – 2019 வருடத்திற்கான அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ தரவரிசையில் முதலிடத்தினை தட்டிச்செல்ல இலங்கை வைத்தியர் ஒருவர் பணிப்பாளராக இருக்கும் ரொக் ஹில்ஹி, ஹெல்த் சவுத் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு (Health South Rehabilitation Hospital of Rock Hill) முடிந்துள்ளது.

அது தவிர்ந்த வருடத்திற்கான பிரபல பணிப்பாளர் விருதும் குறித்த இலங்கை வைத்தியரான ஷிராணி மாலிகா ஜயசூரியவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் 52 பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 149 வைத்தியசாலைகள் குறித்த விருதினை தட்டிச் செல்ல விண்ணப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.