மீனவர்களுக்கு அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, கடற்கரையோர பிரதேசங்களில் மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அம்பலங்கொட தொடக்கம் பொத்துவில் வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகமானது 70 – 80 கிலோ மீட்டர் அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.