(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளது 40வது பேரவையின் கூட்டத் தொடருக்கு இலங்கை, அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்கவுள்ளோரது பெயர் விவரங்களை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் செல்லும் குறித்த குழுவில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. சரத் அமுனுகம, வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.
அவர்களுடன் ஐ.நாவிலுள்ள இலங்கைக்கான நிரந்த வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட குழுவினரும் இணைந்து கொள்வதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.