(FASTNEWS | COLOMBO) – மக்கள் கருத்தினை மதிக்கின்ற அரசாங்கம் தோற்றம் பெற்றதன் பின்னரே புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயம் என்றும், அவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பு அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் அமையும் எனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், “..தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடந்த நான்கு வருட காலமாக முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகி விட்டது. தற்போது அதிகார பகிர்வு தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.
இவ்விடயத்தில் பல முரண்பாடுகளும் காணப்படுகின்றது. இப்பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பது சாத்தியமற்ற விடயமாகும்..” எனவும் தெரிவித்தார்.