அநுராதபுரத்தில் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் வாகனம் விபத்து

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழ்ந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்களே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த வேனொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் ரம்பேவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.