முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் வசந்த பெரேராவை மாத்தளை பொலிஸார் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேராவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை லக்ஷ்மன் வசந்த பெரேரா பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இதன் போதே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

(riz)