திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த கோரும் தீர்மானம் 23ம் திகதியன்று…

(FASTNEWS | COLOMBO) – பௌத்த மறை நூலான திரிபீடகத்தை உலக மறை நூலாக பிரகடனப்படுத்த கோரும் நடைமுறையுடன் இணைந்ததாக விசேட நிகழ்ச்சிகள் இன்று(16) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒரு வார காலம் இடம்பெறவுள்ளன. இதனுடன் இணைந்ததாக நாடெங்கிலுமுள்ள 226 விகாரைகளில் அறநெறி பாடசாலைகளை அமைக்கும் முயற்சிகள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய திரிபீடகம் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் அதனை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்த கோரும் தீர்மானம் எதிர்வரும் 23ம் திகதி கண்டி தலதா மாளிகையில் யுனெஸ்கோ அமைப்பிடம் ஒப்படைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.