மெக்சிகோ மதில் சுவர் – டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை இரத்து செய்ய வாக்கெடுப்பு..

(FASTNEWS | MEXICO) – மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அவசர சட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தால் நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்வரும் 26ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது ‘வீட்டோ’ (சிறப்பு) அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரிக்கும் உத்தரவில் நேற்று(15) கையொப்பமிட்ட நிலையில், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பதா? இரத்து செய்வதா? என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் வரும் 26ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.