(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.