(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று(18) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுக் கூறியுள்ளது.
மேலும், ஊவா மற்றும் வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.