‘சாராயம்’ விலையும் அதிகரிப்பு…

‘சாராயம்’ விலையும் அதிகரிப்பு…

(FASTNEWS | COLOMBO) – வரவு செலவுத் திட்ட்டத்தில் மதுபானம், புகையிலை, பீர், வைன், சிகரெட் மற்றும் பீடி ஆகிய உற்பத்திகளது விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விசேட சாராய வகைகளில் ஒன்றான ‘கல்லு சாராயம்’ போத்தல் ஒன்றினது விலையும் அதுகரிக்கப்பட வேண்டும் என தான் யோசனை ஒன்றினை முன்வைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொற்றா நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் கல்லு சாராயத்தின் விலை அதிகரிக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்றும் அமைச்சர் நேற்று(17) அரச செய்தித் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.