
நட்ஸ் பர்ஃபி எளிய முறையில் செய்வது எப்படி…
குழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் சத்தானது இந்த டிரை ஃப்ரூட்ஸ் – நட்ஸ் பர்ஃபி. இந்த பர்ஃபியை எளிய முறையில் செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பேரீச்சம்பழம் – 100 கிராம்,
அத்திப்பழம் – 1,
உலர் திராட்சை (கிஸ்மிஸ்) – ஒரு கைப்பிடி,
பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் – தலா ஒரு கைப்பிடி,
நெய் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை.
செய்முறை :
மிக்ஸியில் பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட்டை கொரகொரப்பாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும். இதில் அத்திப்பழம் பேரீச்சை, கிஸ்மிஸ் ஆகியவற்றை சுத்தம் செய்து மிக்ஸியில் மசித்துப் போடவும்.
ஏலக்காய் தூளும் நெய்யும் கலந்து நன்கு உருட்டி பர்ஃபிகளாகத் தட்டிப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான டிரை ஃப்ரூட்ஸ் – நட்ஸ் பர்ஃபி ரெடி.
