(FASTNEWS | COLOMBO) – சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட தென் மாகாண சபையின் உறுப்பினர் ‘ரத்தரன்’ என்றழைக்கப்படும் கிருஷாந்த புஷ்பகுமார, தன்னுடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக இராஜினாமாச் செய்யவுள்ளதாக இன்று(18) அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில்;
“எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெறுகிறது. ஆதலால் நான் யோசித்தேன்.. அரசியல்வாதி ஒருவருக்கு மக்கள் வாக்கினை வழங்குவது நம்பிக்கையினை வைத்து என்று அந்த நம்பிக்கையினை நான் அழிக்க விரும்பவில்லை.
ஆதலால் காலி மாவட்ட மக்கள் வாக்களித்தது, எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் என கதைக்கும் ரத்தரங் இற்கே கோழைக்கு அல்ல. எனக்கு இவ்வாறான குற்றச்சாட்டினை முன்வைத்தது எனக்கு வாக்களித்த மக்களுக்கு அது கறுப்புப் பல்லமாகும். மேலும் நான் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிக்கு இழுக்காகும். உலக அரசியலின் படி அரசியல்வாதி ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் இடத்து அவர் அரசியல் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு..
எனக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டினையும் தான் ஏற்றுக் கொண்டில்லை.. ஆதலால் நான் நினைத்தேன் சாதாரண மனிதனாக நீதிமன்றம் செல்ல.. ஏனெனில் உறுப்பினர் பதவியுடன் பிணை வழங்கப்பட்டால் அது தவறு.. மக்கள் நீதிமன்றினை நம்புகின்றனர் நீதிமன்றம் தன்னை நிரபராதி என அறிவிக்கும் வரையில் மக்களுடன் மக்களாக இருப்பேன்..”