Pick Me நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

Pick Me நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

(FASTNEWS | COLOMBO) – ‘Pick Me’ நிறுவனத்திற்கு கீழுள்ள முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோரினால் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி குறித்த நிறுவனத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்னாள் ‘Pick Me’வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக லங்கா முச்சக்கர வண்டிகளது உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெர்வித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த நிறுவனத்தின் கீழ் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் முதல் கிலோமீட்டருக்கு 35 ரூபா அறவிட்ட கட்டணம் தற்போது 25 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளதாகும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குறித்த நிறுவனத்திற்கு கீழ் பதிவாகும் வாகனங்கள் பயணித்தாலும் இல்லை என்றாலும் நாளுக்கு 100 ரூபா அறவிடுவதாகவும் இது நியாயமற்ற முறை என்றும் குறித்த நடவடிக்கையினை நிறுத்துமாறும் குறித்த சங்கம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.